Latest topics
» என் ஆண்குறியில் விறைப்பு குறைவு மற்றும் விருப்பமின்மை
Fri Nov 28, 2014 12:45 am by sathi

» kajal agarwal
Thu Nov 06, 2014 11:59 pm by Guest

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
Wed Aug 27, 2014 4:08 pm by santhoshpart

» குடிகாரன் பொண்டாட்டி
Tue Oct 23, 2012 10:27 pm by Admin

» நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்!
Tue Oct 23, 2012 6:07 pm by Guest

» காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க!
Tue Oct 23, 2012 6:05 pm by Guest

» ஆண்மகன் kavithai
Tue Oct 23, 2012 11:29 am by Admin

» வெங்காயம் வெட்டும் போது கண்களில் தண்ணீர் வரக் காரணம்
Mon Oct 22, 2012 8:38 pm by meena

» கோயம்பேடு பேருந்து நிலையம் - சினிமா விமர்சனம்
Mon Oct 22, 2012 8:35 pm by meena

» வாழ்க்கை - kavithai
Mon Oct 22, 2012 8:34 pm by meena

» சேரவே முடியாத காதல்
Mon Oct 22, 2012 8:33 pm by meena

» குடி கெடுத்த குடி
Mon Oct 22, 2012 8:31 pm by meena

» செவ்வரளி மலரே
Mon Oct 22, 2012 8:30 pm by meena

» சுக்கு மருத்துவப்பயன்கள்...
Mon Oct 22, 2012 8:30 pm by meena

» இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட
Mon Oct 22, 2012 8:27 pm by meena

» நலம் கொடுக்கும் இலைகள்
Mon Oct 22, 2012 8:25 pm by meena

» நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…
Mon Oct 22, 2012 8:22 pm by meena

» ஒரு காதல் Take Off !!!
Mon Oct 22, 2012 2:40 pm by Admin

» ஆண்களின் எந்த விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்கும் ?
Mon Oct 22, 2012 1:56 pm by Admin

»  தாம்பத்யத்திற்கு சில டிப்ஸ்
Mon Oct 22, 2012 1:14 pm by Admin

CMP 120

டேட்டிங் (Dating) - சிறுகதை

Go down

டேட்டிங் (Dating) - சிறுகதை

Post  Admin on Sat Oct 20, 2012 3:22 pm


டேட்டிங்ன்னா ஃபிரண்ட்ஸ்கூட போய் சுத்தி, சாப்பிட்டு வர்றதுதானாம்!
அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஜீ.
ஒரு நிமிஷம் அவனுக்கு எதுவும் புரியவில்லை! சொன்னது நன்கு படித்த இளம்பெண். அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் பெண்.


ஒருவேளை நம்மளக் கலாய்க்கிறாளோ? யோசிச்சிட்டே பார்த்தான் கண்களில் அப்படித் தெரியவில்லை
சீரியசாத்தான் சொல்லிச்சு. அவங்க அம்மம்மா கூட உட்கார்ந்து பூஜையறையில்
தேவாரம் பாடிட்டு, கந்தன் கருணை படம் எல்லாம் பாக்கிற பொண்ணு அப்படிச்
சொன்னதில் பெரிதாக ஆச்சரியப்படவும் ஏதுமில்லை.
மாடர்ன் டிரெஸ் போட்டுட்டு ஐபாட் கேட்டுட்டிருப்பாள். ஒரு முறை ஆர்வக்
கோளாறில் அவள் ஐபாட்டை காதுக்கு கொடுத்துவிட்டு உடனேயே கலவரமாகித்
திருப்பிக் கொடுத்த அனுபவம் ஜீக்கு இருந்தது. ஐபாட்டில் கந்தசஷ்டி கவசம்
கதறிக் கொண்டிருந்தது.
அப்பிடியா? எப்பிடி இப்பிடியெல்லாம்? ஆச்சரியத்துடன் கேட்டு வைத்துவிட்டு அமைதியாக இருந்தான்.
“ஆன்டி தான் சொன்னா” பொண்ணு ஆரம்பிச்சுது.
அதில பாருங்க பொண்ணுங்க ஒரு விஷயத்தை ஆரம்பிச்சாலே முழுசா சொல்லி
முடிக்கணும்னு முடிவெடுத்த பிறகுதான் சொல்வாங்க. அப்பிடி ஒரு தடவை முடிவு
பண்ணிட்டா, அப்புறம் அவங்க பேச்சை மட்டுமில்ல அருகில் இருப்பவனின் கதறல்
கெஞ்சலைக்கூட கேட்க மாட்டாங்க. ஒரு வழி பண்ணிடுவாங்க.
ஜீயும் வழக்கம் போல எனக்கு இதுல இன்ட்ரெஸ்ட்டே கிடையாது. ஏதோ நீங்க
சொல்றதால கேட்டுக்கிறேன் அப்பிடீங்கிற மாதிரி ஒரு முகபாவத்தோட
கேட்டுட்டிருந்தான்.
ஆன்டி லண்டன்ல இருந்து வந்திருந்தாங்க. அவர் ஒரு பந்தா பார்வதி என்று
தெரிந்தது. அவர் பேச ஆரம்பிக்கும் ஐந்து வசனங்களில் மூன்று அங்க லண்டன்ல
எல்லாம்.. என்றே ஆரம்பிக்கும். மீதி இரண்டு என்ன இது? இங்க இப்பிடி
இருக்கு? என்பதாக அமையும்.
வெள்ளைக்காரனெல்லாம் விஞ்ஞானிகள், வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தவனெல்லாம்
அறிவாளிகள் என்ற தீவிர நம்பிக்கை கொண்டது நம் தமிழ்ச் சமூகம். கதை
கேட்பது, கதை சொல்வது, கதை விடுவது என்பவற்றின் மூலமாகவே நமது பொது அறிவை
விருத்தி செய்துகொள்பவர்கள் நாங்கள்.
வெளிநாட்டில இருந்து யாராவது வந்திருந்தா என்ன பண்ணுவோம்? வழக்கம் போல
அவங்களைச் சுத்தி இருந்து கதை கேட்டுட்டிருக்க, அவங்களும் உற்சாகமா துபாய்ல
இருந்து வந்த வடிவேலு மாதிரியே பேசிட்டு இருந்திருக்கிறாங்க. இடையிடையே
மானே, தேனே போல, என்ன ஊர் இது?, என்ன வெக்கை?, என்ன வெய்யில்?, எவ்வளவு
டஸ்ட்? இப்படியான கேள்விகள் வேற.
அவற்றை இப்படியும் பொருள் கொள்ளலாம். இங்கெல்லாம் எப்பிடி இருக்கிறீங்க?,
மனுஷன் இருப்பானா இங்க?, ஆமா, நீங்க எல்லாம் மனுஷர் தான?- இப்பிடியே
போயிட்டு இருந்திருக்கு!
என்ன கண்ட்ரி இது?.. இன்னும் அப்பிடியே இருக்கு?ஆன்டி கேட்க, இவங்களும்
வழக்கம்போல, இந்தக் கண்ட்ரில பிறந்த குற்றத்தை எண்ணி வெட்கி, அவமானப்பட்டு,
அசடு வழிந்து சிரித்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். அவரும் இதே
கண்ட்ரிலதான் பிறந்து முப்பது வயசு வரை வாழ்ந்தவங்க என்பது அவ்வளவு
முக்கியமல்லாத விஷயம்.
எல்லாம் நல்ல படியாத்தான் போயிட்டிருந்திருக்கு. ஆனா பாருங்க இடைல ஒரு
ஃபுளோல பெருமையோட பெருமையா என்னோட மகளும் டேட்டிங் போறவன்னு
சொல்லிட்டாய்ங்க! அங்கதான் ஆரம்பிச்சிடுச்சு!
டேட்டிங்னா என்ன? - கூட்டத்தில இருந்து யாரோ ஒரு காரெக்டர் கேள்வி
கேட்டிருக்கு! நிச்சயமா இந்தப்பொண்ணு இல்ல! ஏன்னா அவங்க குடும்பத்திலயே
விவரமான ஆளு இவங்கதான்! அதனால அந்த இமேஜ மெய்ண்டெயின் பண்றதுக்காகவே,
அவசரப்பட்டு எங்கேயுமே இப்பிடி கேள்வி கேட்கிறதில்ல.
இந்த இடத்திலதான் ஆன்டி சடன் பிரேக் போட்டுட்டு, பேந்த பேந்த
முழிச்சிருக்காங்க. யோசிச்சுப்பாருங்க எம்.பீ.ஏ. படிச்ச இந்த தலைமுறைப்
பொண்ணே இவ்வளவு விவரமாயிருக்குன்னா, இதுக்கு முந்தின ஜெனரேஷன் அம்மா?
அதுக்கும் முந்தின ஜெனரேஷன் அம்மம்மா? இவங்க எல்லாம் எவ்வளவு
விவரமாயிருப்பாங்க?இந்த விவரக் கூட்டத்துக்கு விளங்கப்படுத்திறது எப்பிடி?
உண்மையச் சொன்னா நாளைக்கு இவங்களையே வீட்டுல சேர்ப்பாங்களான்னும் தெரியாது!
சட்டுன்னு இதெல்லாம் யோசிச்ச ஆன்டி சொன்ன பதில்தான் டேட்டிங்ன்னா
ஃபிரண்ட்ஸ்கூட போய் சுத்தி, சாப்பிட்டு வர்றது!
கொடுமையைப் பாருங்க தனது மகள் டேட்டிங் போறதைப் பெருமையாச் சொல்ல முடிந்த
அம்மாவுக்கு டேட்டிங்ன்னா என்னங்கிறதை அதே பெருமையோட சொல்ல முடியல.
இப்பல்லாம் அவங்க குடும்பமே ஆன்டி கூட அடிக்கடி டேட்டிங் போய்ட்டு
இருந்தார்கள். அதாவது ஹோட்டல் ஹோட்டலா போய் விதம்விதமா
சாப்பிட்டுடிருந்தாங்க.
ஜீ நொந்துபோயிருந்தான். ச்சே! எனக்குன்னு வந்து வாய்க்குதுங்க... எனக்கு மட்டும் ஏன் இப்பிடியெல்லாம் நடக்குது?
திடீரென ஏதோ உண்மை உறைக்க, அதிர்ச்சியடைந்து தலையில் கைவைத்துக் கொண்டிருந்தான்.
இந்த சம்பாஷனை நடந்து கொண்டிருந்த போது, ஜீயும் அந்தப் பொண்ணும் KFCல சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
* * * * * * * *
.....
......
இந்த இடத்திலேயே கதை முடிந்துவிட்டது. ஆனாலும் எனக்கொரு கெட்ட பழக்கம்.
பிறகு என்ன நடந்தது என்பது பற்றி சொல்லியே ஆகணும்னு தோணுது. இந்த
அட்டகாசமான டேட்டிங் முடிந்த அன்றே ஜீயின் அந்தப்பெண்ணுடனான நட்பு பணால்
ஆகியிருந்தது.
காரணம்... ஜீயிடம் ஒரு மோசமான பழக்கம் இருந்தது.
தனக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை யாராவது தவறாக புரிந்து
வைத்திருந்தால்..உண்மையை எடுத்துச் சொல்லி புரிய வைத்து விடவேண்டும் என்று
நினைப்பான்.
ஜீ யோசித்தான் நம்ம கூட எல்லாம் நாலு வருஷத்துக்கு ஒருமுறை ஒரு பொண்ணு
வந்து ஹாய், ஹலோ சொல்லும்...அதையும் நாமளே எதையாவது சொல்லித் துரத்தி
விடுறோமே? இப்போ என்ன பண்ணலாம்? , வர்றது வரட்டும் பார்க்கலாம்... நமக்கு
உண்மைதான் முக்கியம்!
கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கஷ்டப்பட்டு பொறுமையா, பக்குவமா டேட்டிங் கின் தோற்றம், வரலாறு, தாற்பரியம்(!?) பற்றிக் கிளாஸ் எடுத்தான்.
ஆனா பொண்ணு சிம்பிளா ஒரு கேள்வி கேட்டுச்சு! ஜீயின் சொந்தச் செலவில்
சூனியத்துக்கான பலன் பெண்ணின் அந்த முதல் கேள்வியிலேயே தெரிந்தது...
அப்போ என்னோட தங்கச்சிய கூடாதவள் என்கிறியா?

Admin
Admin

Posts : 35
Join date : 2012-10-20
Age : 37
Location : Tirunelveli

View user profile http://tamilfriends.forumotion.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum