Latest topics
» என் ஆண்குறியில் விறைப்பு குறைவு மற்றும் விருப்பமின்மை
வெள்ளைக்கார அக்கா EmptyFri Nov 28, 2014 12:45 am by sathi

» kajal agarwal
வெள்ளைக்கார அக்கா EmptyThu Nov 06, 2014 11:59 pm by Guest

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
வெள்ளைக்கார அக்கா EmptyWed Aug 27, 2014 4:08 pm by santhoshpart

» குடிகாரன் பொண்டாட்டி
வெள்ளைக்கார அக்கா EmptyTue Oct 23, 2012 10:27 pm by Admin

» நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்!
வெள்ளைக்கார அக்கா EmptyTue Oct 23, 2012 6:07 pm by Guest

» காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க!
வெள்ளைக்கார அக்கா EmptyTue Oct 23, 2012 6:05 pm by Guest

» ஆண்மகன் kavithai
வெள்ளைக்கார அக்கா EmptyTue Oct 23, 2012 11:29 am by Admin

» வெங்காயம் வெட்டும் போது கண்களில் தண்ணீர் வரக் காரணம்
வெள்ளைக்கார அக்கா EmptyMon Oct 22, 2012 8:38 pm by meena

» கோயம்பேடு பேருந்து நிலையம் - சினிமா விமர்சனம்
வெள்ளைக்கார அக்கா EmptyMon Oct 22, 2012 8:35 pm by meena

» வாழ்க்கை - kavithai
வெள்ளைக்கார அக்கா EmptyMon Oct 22, 2012 8:34 pm by meena

» சேரவே முடியாத காதல்
வெள்ளைக்கார அக்கா EmptyMon Oct 22, 2012 8:33 pm by meena

» குடி கெடுத்த குடி
வெள்ளைக்கார அக்கா EmptyMon Oct 22, 2012 8:31 pm by meena

» செவ்வரளி மலரே
வெள்ளைக்கார அக்கா EmptyMon Oct 22, 2012 8:30 pm by meena

» சுக்கு மருத்துவப்பயன்கள்...
வெள்ளைக்கார அக்கா EmptyMon Oct 22, 2012 8:30 pm by meena

» இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட
வெள்ளைக்கார அக்கா EmptyMon Oct 22, 2012 8:27 pm by meena

» நலம் கொடுக்கும் இலைகள்
வெள்ளைக்கார அக்கா EmptyMon Oct 22, 2012 8:25 pm by meena

» நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…
வெள்ளைக்கார அக்கா EmptyMon Oct 22, 2012 8:22 pm by meena

» ஒரு காதல் Take Off !!!
வெள்ளைக்கார அக்கா EmptyMon Oct 22, 2012 2:40 pm by Admin

» ஆண்களின் எந்த விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்கும் ?
வெள்ளைக்கார அக்கா EmptyMon Oct 22, 2012 1:56 pm by Admin

»  தாம்பத்யத்திற்கு சில டிப்ஸ்
வெள்ளைக்கார அக்கா EmptyMon Oct 22, 2012 1:14 pm by Admin

CMP 120

வெள்ளைக்கார அக்கா

Go down

வெள்ளைக்கார அக்கா Empty வெள்ளைக்கார அக்கா

Post  Admin on Sun Oct 21, 2012 5:40 pm

வெள்ளைக்கார அக்கா Kajal+agarwal+hot+in+saree_2
பே ரூந்தில் என் இருக்கைக்கு முன் இருக்கையில் ஒரு வெள்ளைக்கார ஜோடி!
படம் ஆரம்பித்தார்கள் அரவான்! ஒரே நேரத்தில் பலர் பேசுவது அல்லது கத்துவது அல்லது கூவுவது,மற்றும் அடிக்கடி குளோசப்பில் பசுபதி மற்றும் பலரின் சிவப்பேறிய வாய் எனக் குதூகலமாக ஆரம்பித்தது.
அரவான் நல்ல படமென்பது வேறு. ஒரு பேரூந்துப் பயணத்தில் பார்க்க முடியுமா என்பதை நம்மாளுங்கதான்யோசிக்கணும்! தமிழ் தெரிந்த எங்களுக்கே இரைச்சல் தாங்க முடியவில்லைன்னா... அக்கா வேகமாக எழுந்து சென்றார். சவுண்ட் குறைக்கப்பட்டது. நண்பர் சொன்னார் என்ன இருந்தாலும் வெள்ளைத் தோலுக்கென்று ஒரு தனி மரியாதை இருக்கத்தான் செய்யுது. உண்மைதான் இதெல்லாம் நாங்க சொன்னா நடக்குமா?
இயல்பாகவே நம்மவர்களுக்கு ஒரு ஒரு வெள்ளைத் தோலுக்கு மதிப்பளிக்கும், வளைந்து கொடுக்கும் குணம் வாய்க்கப் பெற்றிருக்கிறது. இது ஜெனட்டிக்கலாக நம் முன்னோரிடமிருந்து கடத்தப்பட்டு வருகிறதுபோலும்.
ஆனாலும் அக்கா தலைக்கு மேலே ஒரு ஸ்பீக்கர் இருந்ததால் அவஸ்தைப் பட்டுக்கொண்டே இருந்தார். நம்மாளுங்க வேற சவுண்டைக் குறைக்கிறதும் கொஞ்சநேரத்தில மறுபடியும் கூட்டுறதுமா நம்ம பூர்வீக புத்தி யைக் காட்டிட்டு இருக்க, பத்து நிமிஷத்துக்கொருதரம் எழுந்துபோய் புகார் செய்துகொண்டிருந்த அக்கா ஒரு கட்டத்தில டயர்ட் ஆகி, தன்னோட யன்னலோர சீட்டை, தம்பிக்கு மாத்தி, அந்த சீட்டும் செட்டாகாமதிரும்பத் திரும்ப சீட் மாத்தி, அவனை வேற இம்சைப்படுத்தி...! ஆனா பாருங்க அந்தத் தம்பிய நினைச்சா ரொம்பப் பாவமா இருந்திச்சு எவ்வளவு பொறுமை? சின்ன முகச்சுழிப்பு இல்லை! அக்காக்கு அடக்கமா, பணிவா குடும்பத்துக்கு ஏற்ற பயபுள்ள!
எப்பிடி சிக்கினானோ? அவனை நினைச்ச ரொம்பப் பாவமா...நம்மாளுங்கதான் அப்பிடீன்னா வெள்ளைக்காரனுக்கும் அதே நிலைமைதானா?
சரி நம்ம எல்லாரையும் பற்றி அவங்க என்ன யோசிச்சிருப்பாய்ங்க? இவனுங்க படமும் அப்பிடி! இவனுங்களும் அப்பிடியேதானா !?
* * * * * * *
ப க்கத்துக் கோவில் திருவிழா! காலையில் கொஞ்ச நேரம் அதிகமாத் தூங்கலாம்னா நித்யஸ்ரீ அதட்டி எழுப்பிவிட்டார்!
அப்பர் தாச மார்க்கத்தில இறைவனை எஜமானனா பாவிச்சு, சுந்தரர் சக மார்க்கத்தில தோழனாப்பாவிச்சு, மணிவாசகர் தலைவன் - தலைவியா இறைவனை வழிபட்டதா சொன்னாய்ங்க!
ஒரு வேளை நித்யஸ்ரீ பாடுறது வாத்தியார் மார்க்கமா இருக்குமோ? இறைவனை மாணவனாப் பாவித்து... பக்திப் பாடல்கள்லயும் ஒரு அதட்டல், சின்ன கண்டிப்பு தெரியுது!
* * * * * * *
கமெண்ட்ஸ்!
சமீபத்தில்தான் நண்பன் படம் பார்த்துட்டு பார்த்தி ஒரு கமென்ட் அடிச்சான். வழமையா விஜய்படம் பார்க்காத அவன் ஒரே கமெண்டிலேயே நச்சுன்னு! படம் பார்க்கும்போது அவனுக்கு தோணிச்சாம்...
இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் உங்கள் விஜய்!
தி யேட்டர் கமெண்ட்ஸ் சில வேளைகளில் ரகளையாக இருக்கும்! ஆனால் கலாச்சாரம் புகழ் யாழ்ப்பாணத் தமிழர்களின் அதிகரிப்பிற்கேற்ப தியேட்டர்களில் செந்தமிழ் வார்த்தைப் பிரயோகம் அதிகரித்ததும், குறிப்பாக ஹீரோயின் அறிமுகத்தின்போது, பாடல்களின் போது, செம்மொழி அர்ச்சனைகள் இடம்பெறுவதும் தமிழ்ப்படங்கள் ஓடும் தியேட்டர்களில் மட்டும் வழமையானஒன்று!
ஆயிரத்தில் ஒருவன் படம் ரிலீசானபோது தியேட்டரில் எங்க குறூப்புக்கு முன் வரிசைல ஒரு பெரிய குடும்பமே வந்திருந்தது. அம்மா, அப்பா, அண்ணா, தம்பி, தங்கச்சி, தாத்தா அதில புதுசா கல்யாணமான ஜோடி எல்லாம் குடும்பமா படம் பார்க்க வந்ததில், அவங்களுக்கு எப்பிடி இருந்துச்சோ சில நேரத்தில எங்களுக்கு சங்கடமா இருந்திச்சு! தியேட்டர்ல செம்ம கமெண்ட்ஸ்!
படத்தில் ரீமா சென் பார்த்தீபனைப் பார்த்து மன்னரேகூட வருவீரோ? தொடர்ந்து கொஞ்சநேரம் நிசப்தம். கமென்ட் அடிக்க நினைத்து, கண்ட்ரோல் பண்ணிட்டிருக்க, கீழ இருந்த யாரோஒருத்தன் என் மனதறிந்து கத்தினான்.
சட்டுப் புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க மன்னரே!
* * * * * * *
பேய் வீடு!
எங்கள் கம்பெனி ரெசிடென்சில் தங்கியிருக்கிறவங்க ஆறு பேர்ல என்னைத் தவிர, மற்ற எல்லாரும் சிங்கள கன்சல்டன்ட் அங்கிள்ஸ்! எல்லாரும் கண்டியைச் சேர்ந்தவர்கள்! நான் மட்டும் கொழும்பு!
கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஏதோ பேசிட்டிருந்தாய்ங்க. முதல்ல நான் பெரிசாக் கவனிக்கல! அப்புறம் பேச்சில ஹொல்மங் ன்னு ஒரு சொல் அடிபட...அப்பிடின்னா சிங்களத்தில பேய் இல்ல? பேஸ்தடிச்சுப் போய்க் கேட்டேன். முதல்ல பேசின அங்கிள் விளக்கமா சொன்னார். சாமத்தில சில அமானுஷ்யமான சத்தம் கேக்குது! நாயா, மனுஷனான்னே தெரியாம ஊளையிடுற மாதிரி, கதவைத் தட்டுற மாதிரி, திறப்பால திறக்க ட்ரை பண்ற மாதிரி...ஆனா எங்க இருந்து சத்தம் வருதுன்னு சொல்ல முடியல! வெளில சில சமயம் வீட்டுக்குள்ள இருந்தும்!
இதைக் கேட்ட உடனே எனக்கு வந்திச்சு பாருங்க கோபம்!
இவனுங்க எல்லாம் படிச்சவனுங்கதானா? கொஞ்சம் கூடப் பகுத்தறிவே கிடையாதா?எப்பப் பாத்தாலும் அறிவுகெட்டதனமாவே பேசிக்கிட்டு... இப்பிடியா பேசுறது? இல்ல தெரியாமத்தான் கேக்குறேன்!
இவனுங்க எல்லாம் வெள்ளிக்கிழமை அஞ்சு மணிக்கே சொந்த வாகனத்தில ஊருக்குப் போயிடுவாங்க. ஆனா இரவுபத்தரை மணிமட்டும் கொழும்பு பஸ்ஸூக்காக ஒரு பச்சப்புள்ள இங்க தனியா இருக்கணுமேன்னு யோசிக்கவே மாட்டானுகளா?

Admin
Admin

Posts : 35
Join date : 2012-10-20
Age : 37
Location : Tirunelveli

View user profile http://tamilfriends.forumotion.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum